இந்தியாசெய்திகள்விளையாட்டு

நான் ஓரினச் சேர்க்கையாளர்’ ஆசிய தடகள சாதனையாளர் அறிவிப்பால் பரபரப்பு

இந்தியாவின் அதிவேக ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டீ சந்த். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 11.24 வினாடிகளில் இலக்கை கடந்து தேசிய சாதனையாளராக வளம் வருகிறார். கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டம் இரண்டிலும் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார். ஒடிஸாவை சேர்ந்த 23 வயதான டூட்டீ சந்த். சில ஆண்டுகளுக்கு முன்பு பாலின பிரச்சினையில் சிக்கினார்.அதாவது அவரிடம் ஆண் தன்மைக்குரிய ஹார்மோன் அதிகமா இருப்பதாக கூறி தடகளத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு விளையாட்டுக்கான கோர்ட்டில் அப்பீல் செய்து சாதகமான தீர்ப்பை பெற்றார்.

இந்த நிலையில் அவர், தான் ஒரு ஓரின சேர்க்கையாளர் என்ற தகவலை வெளியிட்டு இப்போது புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். ஒரே பாலினத்தை விரும்புகிறவர்கள் என்று ஒரு சில விளையாட்டு பிரபலங்களே தைரியமாக வெளியுலகுக்கு சொல்லி இருக்கிறார்கள். அந்த பட்டியலில் டூட்டீ சத்தும் இணைந்துள்ளார்.

இதுகுறித்து டுத்தே சந்த் நேற்று கூறியதாவது. கடந்த 5 ஆண்டுகளாக எனது கிராமத்தை சேர்ந்த 19 வயது பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறேன்.அந்த பெண் பி.ஏ 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். அவர் எனக்கு சொந்தக்காரர்தான். அவரது வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் நிறைய நேரத்தை செலவிடுவேன். அவர் தான் எனது உயிர் மூச்சு. எதிர்காலத்தில் அவருடன் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close