செய்திகள்

இந்த ஆண்டு வழக்கத்திலிருந்து மறைந்து போன இப்தார் விருந்து !! எங்கே போனார்கள் மத சார்பற்ற கட்சிகள்?

ரம்சான் பண்டிகை என்பது குறிப்பிட்ட மதத்தினரால் கொண்டாடப்படும் சமயப்பண்டிகை. ஆனால் தங்களை மத சார்பற்றவர்கள் என்று கூறிக்கொளும் கட்சிகளும், அரசும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இப்தார் விருந்து வைத்து ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களை மட்டும் மகிழ்ச்சியிலாழ்த்தி வந்தனர்.  இப்படிப்பட்டவர்கள் தீபாவளி, கிறிஸ்துமசையும் ஏன் கொண்டாடுவதில்லை என நியாயமாக யார் கேட்டாலும் அவர்களுக்கு பதில் கிடைக்காது.

வாக்கு வங்கி அரசியலுக்காக இந்தியாவில் முதன் முதலாக இப்தார் விருந்தை கையாண்டவர் ஜவஹர்லால் நேரு. அதற்காக அந்த காலத்திலேயே அவர் இலட்சக் கணக்கில் மக்கள் வரிப்பணத்தில் செலவு செய்து தங்களுக்கு ஆனப்பட்ட பிரமுகர்களை வரவழைத்து கொண்டாட்டம் செய்ததை அன்றே உண்மையான மதசார்பற்றவர்கள் கண்டித்தனர்.

அவர் தொடக்கி வைத்த அந்த பண்டிகையை இசுலாமியர்களின் வாக்கு வங்கியை குறிவைக்கும் விதத்தில் நாட்டில் உள்ள எல்லா கட்சிகளும், குறிப்பாக தங்களை மதசார்பற்ற கட்சியாக காட்டிக் கொள்ளும் அனைத்து கட்சிகளும் பின்பற்றத் தொடங்கின. இதற்காக கோடிக்கணக்கில் அரசுகள் பணத்தை செலவு செய்தன.

இந்த நிலையில் மதசார்பற்ற குடியரசு மாளிகையில் இந்த நிகழ்ச்சி வேண்டாம் எனக்கூறி முதன்முதலாக நிறுத்தியவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள்தான். ஆனால் அடுத்து குடியரசுத்தலைவர்களாக வந்த பிரதீபா படேலும், பிரணாப் முகர்ஜியும் மீண்டும் இந்த சடங்கை ஏராளமாக செலவிட்டு செய்தனர். ஆனால் பிரதமர் மோடி பிரணாப் முகர்ஜி வைத்த இந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து குடியரசுத் தலைவராக வந்த ராம் நாத் கோவிந்த் அவர்களும் அப்துல் கலாமை பின்பற்றி இந்த நிகழ்ச்சியை நிறுத்திவிட்டார்.

இந்த நிலையில் டெல்லி முதல்வரான கேஜ்ரிவால் மற்றவர்களை விட தன்னை அதிக அளவில் மதசார்பற்றவராக காட்டிக் கொள்வது அதிகம். மற்ற முதல்வர்களை விட கடந்த ஆண்டுகளில் இப்தார் நிகழ்ச்சிக்காக அதிக செலவு செய்ததுள்ளது இவர்தானாம்.

2015-16 ஆம் ஆண்டில் கெஜ்ரிவால் இஃப்தார் விருந்துக்காக ரூ. 4,385,810 செலவு செய்துள்ளதாகவும், 2016-17ல் ரூ. 11,489,544. 2017-18ல் அதே நோக்கத்திற்காக ரூ.4,223,619. செலவு செய்துள்ளதாகவும் தகவல் கேட்பு உரிமை சட்டம் மனு அளித்து இது தெரிய வந்துள்ளது.

சென்ற ஆண்டு இதே காலத்தில் மோடி அரசுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஓன்று சேர வேண்டும் என்பதற்காகவும், முஸ்லிம்களை காக்காய் பிடிப்பதற்காகவும் எதிர் கட்சிகள் காங்கிரஸ் வைத்த இப்தார் விருந்தில் கலந்து கொண்டன. உண்மையில் இதை அனைவரும் அரசியல் சடங்காகத்தான் பார்த்தனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் தங்களை மத சார்ப்பின்மையாளர்களாக கூறிக்கொள்ளும் எந்த பெரிய அரசியல் கட்சியும், மாநில அரசுகளும் இப்தார் விருந்து பற்றி கண்டுகொண்டதாக தெரியவில்லை. இதற்கு காரணம் வேறொன்றுமல்ல. அனைத்து கட்ட தேர்தல்களும் ரம்ஜானுக்கு முன்பே முடிந்துவிடுகின்றன என்பதாக இருக்கக் கூடும்.

அது மட்டுமல்லாமல் உண்மையான மத சார்பின்மைக்கும் அரசியல் கட்சிகளின் மத சார்பின்மைக்கும் இடையேயான இடைவெளியை மக்கள் கண்டு கொண்டுவிட்டார்கள் என்பதுதான். இதை ஏற்கனவே அப்துல் கலாம் உணர்த்திவிட்டார். தற்போதைய ஜனாதிபதியும் அவரை பின்பற்றி உணர்த்துகின்றார்.

Tags
Show More
Back to top button
Close
Close