சினிமாசெய்திகள்

விக்ரம் படத்தில் நடித்தது எனக்கு பிடிக்கவில்லை மனம் திறந்த பிரபல நடிகை !

காக்கா முட்டை படத்தில் தனது இயல்பான நடிப்பால் அனைவரின் பாராட்டைப் பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். முன்னணி நடிகர்கள் நடித்த சாமி ஸ்கொயர், தர்மதுரை, வடசென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கணையாக நடித்துள்ளார். தற்போது துருவ நட்சத்திரம், எஸ்கே 16 என வரிசையாக பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளியான சாமி படத்தின் முதல் பாகத்தில் நடித்த த்ரிஷாதான் இரண்டாம் பாகத்திலும் நடிப்பார் என சொல்லப்பட்டது . ஆனால் அந்தப் படத்தில் இருந்து வெளியேறிவிட்டார் அதன் பின் ஐஸ்வர்யா ராஜேஷை நடிக்க வைத்தனர். படம் வெளியாகை தோல்வி அடைந்த நிலையில் சாமி ஸ்கொயர் படத்தில் நடிக்க தனக்கு விருப்பமே இல்லை என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் கூறும் போது, ‘சாமி 2 படத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்றாலும், தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டதால் தான் நடிக்க ஒப்புக் கொண்டேன். கமர்ஷியல் படங்களில் இயக்குநர்களின் முதல் தேர்வாக நான் இருப்பது கிடையாது என எனக்கு தெரியும். இரண்டு பாடல்களுக்கு ஆடி விட்டு, நான்கு காதல் காட்சிகளில் வருவது எல்லாம் எனக்கு பிடிக்காது’ என கூறியுள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close