இந்தியா

உலக அளவில் முதலிடம் – லிஸ்டில் இடம்பெற்ற பொதுத்துறை நிறுவனம் : சீனா, அமெரிக்கா வரிசையில் கெத்து காட்டும் இந்தியா..!

அனல்மின் நிலையங்களில் நிலக்கரிதான் பிரதான எரிபொருளாக இருந்து வருகிறது. உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தி அதிகமாக இருந்தாலும் தேவையை ஈடு செய்யும் வகையில் உற்பத்தி இல்லாததால் அதிக அளவு நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது.

சர்வதேச அளவில் நிலக்கரி உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. சீனாவும், அமெரிக்காவும் முதல் இரண்டு இடங்களில் இருந்து வருகின்றன. அதே சமயம் உலக அளவில் நிலக்கரி உற்பத்தியில் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாதான் முதலிடத்தில் இருந்து வருகிறது.

கடந்த நிதி ஆண்டில் (2018-19) கோல் இந்தியா நிறுவனம் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மொத்தம் 48 கோடி டன் நிலக்கரி சப்ளை செய்திருக்கிறது. முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 7 சதவீதம் அதிகமாகும். அப்போது சப்ளை 45 கோடி டன்னாக இருந்தது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் அனல்மின் நிலையங்களுக்கு கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி சப்ளை 1 சதவீதம் மட்டும் அதிகரித்து 4.07 கோடி டன்னாக உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 4.03 கோடி டன்னாக இருந்தது. முந்தைய மாதத்தில் (மார்ச்) இந்நிறுவனத்தின் நிலக்கரி சப்ளை 4.61 கோடி டன்னாக இருந்தது.

நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில் மின் நிலையங்களுக்கு இந்நிறுவனம் 53 கோடி டன் நிலக்கரி சப்னை செய்ய முடிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 8.6 சதவீதம் அதிகமாகும். மத்திய நிலக்கரி அமைச்சகம், நடப்பு நிதி ஆண்டில் கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி இலக்கை 66 கோடி டன்னாக நிர்ணயித்து இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டு இலக்கை விட இது 5 கோடி டன் அதிகமாகும்.

Tags
Show More
Back to top button
Close
Close