செய்திகள்

கேதார்நாத் சிவனிடம் மக்களுக்காக பிரார்த்தித்தேன் !! தியானத்திலிருந்து விடுபெற்ற பிரதமர் பேட்டி

மக்களவை தேர்தலுக்கான 7வது கட்ட பிரசாரத்தை வெள்ளிக்கிழமை முடித்த பிரதமர் மோடி, சனிக்கிழமை, உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் சென்றார். அங்குள்ள புகழ்பெற்ற சிவபெருமான் கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு செய்து பிரார்த்தனை செய்தார்.

நேற்று கேதார்நாத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, அங்குள்ள பனிக்குகையில் பிரதமர் மோடி தியானம் செய்தார். இந்தநிலையில், இன்று காலை கேதார்நாத் பகுதிகளை அவர் சுற்றிப் பார்த்தார். பின்னர் செய்தியாளர் சந்தித்த பிரதமர், கேதார்நாத்தில் தரிசனம் செய்ததை அதிர்ஷ்டமாக கருதுவதாக குறிப்பிட்டார். நாட்டு நடப்புகளில் இருந்து விலகி ஆன்மிக பயணம் மேற்கொண்டாக அவர் தெரிவித்தார். 

மேலும், நாட்டு மக்களுக்காக நான் பிரார்த்தனை செய்தேன். நான் இறைவனிடம் யாருக்காகவும், எதையும் கேட்கவில்லை. கொடுப்பதற்காக நாம் படைக்கப்பட்டுள்ளோம். எடுப்பதற்காக அல்ல. இவ்வாறு மோடி கூறினார். 

இதையடுத்து, அங்கிருந்து பத்ரிநாத் செல்லும் பிரதமர், அங்குள்ள கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்.

Tags
Show More
Back to top button
Close
Close