செய்திகள்

காங்கேயம் இரக மாடு வளர்ப்பில் ஐ.டி. ஊழியரின் ஆசை: நிறைவேற்றி வைத்த கோசாலை நிர்வாகி

காங்கேயம் மாட்டை வாங்க விரும்பிய ஐ.டி. ஊழியரின் ஆசையை திருப்பூரில் செயல்படும் கோசாலை உரிமையாளர் நிறைவேற்றிய சம்பவம் இனிய நிகழ்வாக நடந்தேறியுள்ளது என்று நியூஸ் J செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் செயல்பட்டுவரும் கொங்க கோசாலையில்,அடிமாட்டிற்கு விற்கப்படும் மாடுகளை வாங்கி, பராமரித்து மீண்டும் விவசாயிகளுக்கே விற்கப்படுகிறது. கடந்த2013 முதல் விவசாயிகளுக்கும் மாடு வளர்ப்போருக்கும் உறுதுணையாக இந்த கோசாலை செயல்பட்டு வருகிறது.

காங்கேயம் இனமாடுகளின் சாணி, பால் உள்ளிட்டவை மூலம் மதிப்புக்கூட்டல் பொருட்கள் இந்த கோசாலையில் தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் பணிபுரிந்துவந்த சிவகுமார் என்பவர் காங்கேயம் மாடுகளின் பால் ஏற்பட்ட ஈர்ப்பால், தன்னுடைய பணியை உதறிவிட்டு,இங்குவந்து இந்த கோசாலையை துவங்கி பராமரித்து வருகிறார்.

சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் கோவையை சேர்ந்த மதன்குமார் என்பவர், காங்கேயம் மாட்டை வளர்க்க வேண்டும் என்ற கனவில், சிவக்குமாரை தொடர்பு கொண்ட நிலையில்,அவரிடம் குறைந்த தொகையே இருந்தபோதிலும், அவருக்கு மாட்டை அளித்துள்ளார் சிவக்குமார். இதற்கு மதன்குமார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மதன்குமார் போல மாடு வளர்ப்பில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு தங்களால் ஆன உதவியை செய்வதாகவும் கூறுகிறார் சிவக்குமார்.

Tags
Show More
Back to top button
Close
Close