செய்திகள்

யாமிருக்க பயம் ஏன் ? ஜிகாதிகளுக்கு எதிராக இலங்கைக்கு உதவ இந்தியா அறிவிப்பு !

இலங்கையில் தலைதூக்கியுள்ள ஐ.எஸ். இயக்கத்தின் ஜிகாதி தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில், இலங்கை அரசுக்கு இந்தியா தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது. புத்த பூர்ணிமா தினத்தை முன்னிட்டு இலங்கையில் வழிபாட்டுத் தலங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடந்த ஈஸ்டர் தினத்தன்று கிறித்துவ தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் 260 பேர் கொல்லப்பட்டதையடுத்து இலங்கையில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் புத்த பூர்ணிமாவையொட்டி, கண்டியில் உள்ள பெளத்த மத புனித தலத்தில் இந்தியத் தூதர் தரண்ஜித் சிங் சந்து வழிபாடு செய்தார். அதன் பின்னர், அங்குள்ள பெளத்த மதத் தலைவர்களை சந்தித்து புத்த பூர்ணிமா வாழ்த்து தெரிவித்த அவர், இலங்கையின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து விவாதித்தார். 

இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜிகாதி பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கும் இலங்கைக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும்.

கடந்த 2017-ஆம் ஆண்டு புத்த பூர்ணிமா விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்ததை நினைவு கூர்ந்த பெளத்த மதத் தலைவர்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து அளித்து வரும் பேராதரவு குறித்து  பாராட்டினர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close