2019 தேர்தல்செய்திகள்

குஜராத், மகாராஷ்டிரா, உத்திர பிரதேச மாநிலங்களில் அபார வெற்றி பெறும் பா.ஜ.க : படுதோல்வி அடையும் காங்கிரஸ் – டைம்ஸ் நவ்-வி.எம்.ஆர் கணிப்பு

2019 நாடாளுமன்ற தேர்தல் முடிந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு இன்று மாலை முதல் வெளியாக துவங்கியுள்ளன. அதில், டைம்ஸ் நவ் – வி.எம்.ஆர் தனது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா முழுவதும், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 306 இடங்களை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, 132 இடங்களை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் பா.ஜ.க 23 இடங்களையும், காங்கிரஸ் 03 இடங்களையும் கைப்பற்றும் என்றும், கணிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்ட்ராவில் பா.ஜ.க 38 இடங்களையும், காங்கிரஸ் 10 இடங்களையும் கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில், பா.ஜ.க தனி பெரும் கட்சியாக 58 இடங்களை கைப்பற்றும் என்றும் சம்ஜவாதி மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சிகள் இணைந்த கூட்டணி 20 இடங்களை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close