செய்திகள்

தமிழகத்தில் 500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு “விவசாய” ரேஷன் கடை : விவசாயிகளுக்கு வாரி வழங்கும் மோடி அரசு

தமிழகத்தில், 500 ரேஷன் கார்டுகளுக்கு, ஒரு கடை வீதம், விவசாய நியாய விலைக்கடைகள் திறக்கப்பட உள்ளன. வரும் 2022ம் ஆண்டுக்குள், 1.68 லட்சம் கடைகள் திறக்கப்பட உள்ளன என்று தினமலர் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு உடனுக்குடன் உரிய விலை கிடைக்கவும், பொதுமக்களுக்கு அவை குறைந்த விலையில் கிடைக்கவும் வேண்டும் என்ற நோக்கத்துடன், விவசாய நியாய விலைக்கடைகள் நாடு முழுவதும் திறக்கப்படுகின்றன என்று அந்த குறிப்பு மேலும் கூறுகிறது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், ‘கிசான் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் சென்டர்‘ அமைப்பு சார்பில், இந்த கடைகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கிப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வேளாண் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த அமைப்பின் மூலம், அனைத்து மாவட்டங்களிலும், கடை திறக்கும் பணி, படிப்படியாக நடந்து வருகிறது. கோவையில், ரத்தினபுரி, ஆலாந்துறை, பீளமேடு, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட இடங்களில், இந்தகடைகள் திறக்கப்பட்டுள்ளன. இவை, வழக்கமான ரேஷன் கடைகள் போல் அல்லாமல், சூப்பர் மார்க்கெட்டுகள் போல் செயல்படும். மளிகை கடைகளில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும், இந்த நியாய விலைக்கடைகளில் கிடைக்கும். 

பொதுமக்கள், தங்கள் ஆதார் கார்டு, ஸ்மார்ட் ரேஷன் கார்டு, விவசாய அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு பதிவு செய்து, மானிய விலையில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ‘கிசான் ரிசர்ட் அண்ட் டெவலப்மென்ட் சென்டர்’ இயக்குனர் டாக்டர் ஜெயகணேஷ் கூறுகையில், ”விவசாய நியாய விலைக்கடைகள், தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் திறக்கப்பட்டு வருகின்றன.கோவை, நீலகிரி, திருப்பூர், மதுரை, காஞ்சிபுரம், சென்னை, சேலம் மாவட்டங்களில் இதுவரை மொத்தம், 45 கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

”தேர்தல் காரணமாக, புதிய கடைகள் திறப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன், அனைத்து கிராமங்களிலும் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார். கிசான் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் சென்டரின் நிர்வாக அலுவலர் கிருஷ்ணகுமார் கூறுகையில், ”10 சதவீதம் முதல், 90 சதவீதம் வரையிலான மானிய விலையில் பொதுமக்கள் எங்களிடம் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். பொருட்கள் அனைத்தும் உற்பத்தி விலைக்கே விற்பனை செய்யப்படும். காய்கறிகள், முட்டை, பால் உட்பட அனைத்தும் எங்களிடம் கிடைக்கும்.

”தமிழகம் முழுவதும் 500 கார்டுக்கு ஒரு கடை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2022ம் ஆண்டுக்குள் 1.68 லட்சம் கடைகள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.”சிந்தாமணி, அமுதம் அங்காடிகளை போல, இந்த நியாய விலைக்கடைகள் அனைத்தும், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும். சங்கம் சார்பிலும் கடைகள் திறக்கப்படும். பொதுமக்களும், இந்த நியாய விலைக்
கடைகளை எடுத்து நடத்தலாம்,” என்றார். திட்டத்தின் செயல் அலுவலர் கிஷோர் உடன் இருந்தார்.

Tags
Show More
Back to top button
Close
Close