செய்திகள்

புற்று நோய்க்கான 9 முக்கிய மருந்துகளின் விலை 87 சதவீதம் குறைப்பு!! மோடி அரசின் உத்தரவு நடை முறைக்கு வந்தது

புற்றுநோய்க்கு வழங்கப்படும் 9 முக்கிய மருந்துகளின் விலை 87 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. சில்லரை மருந்து விற்பனையாளர்கள், மருந்து தயாரிப்பவர்கள் உள்ளிட்டோரிடம் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் தேசிய மருந்துகள் விலை கட்டுப்பாட்டு ஆணையம் கடந்த 15ம் தேதி வெளியிட்ட உத்தரவால் மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் மாதந்தோறும் புற்றுநோய் சிகிச்சைக்காக பெரும் தொகையை செலவிட்டு வரும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் மிகுந்த பயன் அடைவர்.

முன்பு 22 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி வந்த பெமட்ரெக்சட் 500 மில்லிகிராம் ஊசி மருந்து இனி 2 ஆயிரத்து 800 ரூபாய்க்கே கிடைக்கும். 100 மில்லிகிராம் ஊசி மருந்து 800 ரூபாய்க்கு விற்பனையாகும் இதே போன்று 10 மாத்திரைகள் கொண்ட 100 மில்லிகிராம் எர்லோட்டினிப் முன்பு 6 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் தற்போது அதன் விலை ஆயிரத்து 840 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close