செய்திகள்

அரவக்குறிச்சியில் ₹2,000 நோட்டை ஜெராக்ஸ் எடுத்து டோக்கன்களாக தி.மு.க-வினர் விநியோகம்!! வேட்பாளர் தகுதி நீக்கம் கோரி புகார்

கரூர் பரமத்தி ஒன்றியம், அரவக்குறிச்சி தொகுதியில், ஆர்.கே.நகர் ₹20 டோக்கன்களைப் போலவே தி.மு.க.,வினர் ₹2,000 நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து விநியோகித்தனர். அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். 

அரவக்குறிச்சி தொகுதியில் உள்ளது கார்வழி பஞ்சாயத்து. இங்குள்ள சீலநாயக்கன்பட்டி அண்ணாநகரில், தி.மு.க.,வினர் ஓட்டுக்கு பணம் தருவதற்காக மக்களுக்கு ₹2,000 நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து, அவற்றை டோக்கன்களாக விநியோகித்து வந்தனர். 

தி.மு.க., பரமத்தி ஒன்றிய பொருளாளர் ஜெகநாதன் தலைமையில் இன்று வாக்குப்பதிவு நேரத்தில் தி.மு.க.,வினர் வேட்பாளர் செந்தில்பாலாஜிக்காக இந்த டோக்கன்களை விநியோகித்துள்ளனர். ஓட்டுப் போட்டுவிட்டு ₹2,000 ரூபாய் டோக்கன்களை மாலையில் கொண்டு வந்து கொடுப்பவர்களுக்கு ₹2,000 தரப்படும் என்று உறுதியளித்துள்ளனர். இதை அறிந்து அங்கு அதிமுகவினர் குழுமினர்.

அ.தி.மு.க., கார்வழி பஞ்சாயத்து கிளை செயலாளர் சிவக்குமார் தலைமையிலான சிலர் தேர்தல் பறக்கும்படைக்கு தகவல் கூறினர். பின்னர், டோக்கன் விநியோகித்த தி.மு.க.,வினரை முற்றுகையிட்டனர். இதனை அடுத்து அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் டோக்கன்களை பறிமுதல் செய்தனர். ஆனால், தி.மு.க.,வினர் தப்பியோடி விட்டனர். இதுகுறித்து தேர்தல் பார்வையாளரிடம் அ.தி.மு.க., கார்வழி கிளைச்செயலாளர் சிவக்குமார் புகார் அளித்துள்ளார். 

செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார், ”ஆர்.கே.நகரில் அ.ம.மு.க.வினர் ₹20 நோட்டுகளை டோக்கன்களாக அளித்து புகழ்பெற்றனர். அரவக்குறிச்சியில் தி.மு.க.,வினர் செந்தில் பாலாஜிக்காக அதே பார்முலாவை கையாண்டுள்ளனர். தேர்தல் கமிஷன் முறையாக விசாரித்து, தி.மு.க., வேட்பாளர் செந்தில் பாலாஜியை தகுதிநீக்கம் செய்யவேண்டும்,” என்றார். 

இந்நிலையில், கார்வழி அரசு உயர்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில் திருச்சி மண்டல போலீஸ் ஐ.ஜி., லலிதா லட்சுமி விசாரணை நடத்தினார். அவரிடம், சுயேட்சை வேட்பாளர் ஜோதி சுதர்சனன் ₹2,000 ரூபாய் டோக்கன் குறித்து புகார் அளித்தார். அதுகுறித்து விசாரிக்கவே தான் வந்ததாக ஐ.ஜி., அப்போது தெரிவித்தார். 

Show More
Back to top button
Close
Close