2019 தேர்தல்செய்திகள்

அ.இ.அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி தமிழகத்தில் 16 இடங்களை கைப்பற்றும் : வி.டி.பி அஸோசியேட்ஸ் கணிப்பு

2019 நாடாளுமன்ற தேர்தல் முடிந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு இன்று மாலை முதல் வெளியாக துவங்கியுள்ளன. அதில், டைம்ஸ் நவ் – வி.எம்.ஆர் தனது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா முழுவதும், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 306 இடங்களை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, 132 இடங்களை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

சி. வோட்டர் நடத்திய கருத்து கணிப்பில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 287 இடங்களை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் கூட்டணி 128 இடங்களை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரபல வி.டி.பி அஸோசியேட்ஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், தமிழகத்தில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி 16 இடங்களை கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி 22 இடங்களை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எந்த தேர்தல் நடந்தாலும் தி.மு.க கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்று கண்டிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த தேர்தலுக்கு பிந்தைய கணிப்பு தி.மு.க – காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close