செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் பெண் ஊழியருக்கு முத்தம்! அழகாக இருந்ததால் கொடுத்தேன் என்று முத்தம் கொடுத்தவர் பரபரப்பு!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு தனியார் விமானம் சென்றது. முன்னதாக அந்த விமானத்தில் துபாய் செல்வதற்காக கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த முகமது ஷரீப் (வயது 36) என்பவர் விமான நிலையம் வந்தார்.

பின்னர் துபாய் விமானத்தில் செல்வதற்காக தனியார் விமான நிறுவன மையத்திற்கு சென்று போர்டிங் பாஸ் வாங்கினார்.அப்போது யாரும் எதிர்பாராத அவர் திடீரென அந்த மைய்யத்தில் இருந்த பெண் ஊழியரின் கையை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ஊழியர் கூச்சலிட்டார். உடனே அங்கிருந்த சக பயணிகள் மற்றும் விமான நிறுவன சக ஊழியர்கள் முகமது ஷரீப்பை மடக்கி பிடித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பத்திய தொழிற்படையினரிடம் ஒப்படைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த விமான நிலைய போலீசார்,முகமது ஷரீப்பின் விமான பயணத்தை ரத்து செய்து, அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்து முகமது ஷெரீப்பை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags
Show More
Back to top button
Close
Close