இந்தியா

திகார் பயம் ? ப. சிதம்பரத்திற்கு தமிழிசை சவுக்கடி பதில் ! !

2019 பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. பிரச்சாரத்தின் போது ஆதரவளித்த அனைவர்க்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தலைவர் அமித் ஷா கூட்டாக செய்தியாளர்களை நேற்று சந்தித்து நன்றியினை தெரிவித்தனர். தேர்தல் முடிவுகள் பா.ஜ.க விற்கு சாதகமாக இருக்கும் என்றும், பெரும்பான்மையை 6 கட்டம் தேர்தலின் போதே கண்டந்திருக்க கூடும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

இது குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா சிதம்பரம், தேர்தலில் பா.ஜ.க விற்கு சாதகமாக முடிவு வரவில்லை என்றால் அமித் ஷாவின் மீது பழி சுமத்தவே இந்த செய்தியாளர்கள் சந்திப்பு என்று ட்விட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை, தாங்கள் எதற்கு கவலைப்பட வேண்டாம். தேர்தல் முடிவுகள் மோடிக்கு பலம் கூடுவதாக தான் இருக்கும் என்றார்.

காங்கிரஸ் தேர்தலில் படுதோல்வி அடையும். அதற்கு பாலிகாடாக்களின் பட்டியலை தாயார் செய்துகொள்ளுங்கள் என்றார். மோடிதான் மீண்டும். ஆனால் நீங்கள் மீண்டும் 26வது முறையாக ஜாமீன் பெற முடியாது. ப.சிதம்பரம் அவர்களே உங்களின் திகார் பயம் புரிகிறது. இவ்வாறு தமிழிசை தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close