அரசியல்செய்திகள்

ஸ்டாலின் சொன்னா 86 + 9 = 97….எவ்வளவு…? 97 !!.. வழக்கம் போல உளறிய ஸ்டாலின்!!!

கரூர் மக்களவை தொகுதியில் வேடசந்தூர், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), மணப்பாறை, விராலிமலை உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன.

திமுக ஒரு முறை கரூரில் வென்றுள்ளது. 1989-லிருந்து தம்பிதுரை நான்கு முறை கரூர் மக்களவை தொகுதியிலிருந்து நாடாளுமன்றம் சென்றிருக்கிறார்.

சமீபத்தில் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார். இந்நிலையில் கரூர் மக்களவை தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து வாக்கு சேகரித்த ஸ்டாலின், திமுகவிற்கு 86 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள், காங்கிரசிற்கு 8, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 1, ஆகமொத்தம் எவ்வளவு என்று ஸ்டாலின் மக்களை பார்த்து கேட்க, அதற்கு மக்கள் 95 என்று சொல்ல, அதற்கு ஸ்டாலின் நீங்கள் தவறாக சொல்கிறீர்கள் மொத்தம் 97 வரும் என்று சொல்ல, கூட்டத்தில் சிரிப்பலையாக இருந்தது. ஒரு மாநிலத்தின் முதல்வராக ஆக நினைக்கும் ஸ்டாலினுக்கு கூட்டல், பெருக்கல் தெரியவில்லை, சுதந்திர தினம், குடியரசு தினம் எப்போது என்று தெரியவில்லை, ஆனால் அடுத்த முதல்வர் நான்தான் என்று மட்டும் அடிக்கடி சொல்கிறாரே என்று சமூக வலைத்தளங்களில் ஸ்டாலினை வருத்தேடுத்து வருகின்றனர்.

Tags
Show More
Back to top button
Close
Close