அரசியல்செய்திகள்

தோல்வியை முன்கூட்டியே ஒப்புக் கொண்ட கெஜ்ரிவால்! தனது மரணம் குறித்தும் அழுது புலம்பல்!!

தன்னை கொல்ல சதி நடப்பதாக டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: இந்திராவை கொன்றதை போல் என்னையும் பாதுகாவலர்களால் கொல்ல நேரிடும். எனது பாதுகாவலர்கள் மோடிக்குத்தான் ஓட்டளித்துள்ளனர். எனவே பாஜகவால் தான் பயப்படுவதாக கூறியுள்ளார். 

மேலும் எப்போதும் எனக்கு அதிகம் வாக்களிக்கும் டெல்லி முஸ்லிம்கள் இந்த தேர்தலில் ஒட்டு மொத்தமாக காங்கிரசுக்கு வாக்களித்து விட்டார்கள். இதனால் கிட்டத்தட்ட 12 சதவீத வாக்குகள் காங்கிரசுக்கு சென்றுவிட்டன. தேர்தலுக்கு முந்தைய நாள் இரவு இது நடந்துவிட்டது.

என்றாலும் பாஜக தான் ஜெயிக்கும், ஏன்னா அவர்கள் வாக்குப் பதிவு எந்திரத்தில் ஏதோ தில்லுமுல்லு செய்துவிட்டதுபோல எனக்கு தோன்றுகிறது. எதிர்கட்சிகள் அதிக அளவில் பணம் செலவு செய்தன. என்னிடம் பணம் எதுவும் இல்லை. பணத்தை அவர்களிடம் வாங்கிக் கொண்டு எனக்கு வாக்களியுங்கள் என்று மக்களிடம் கூறினேன் … ஆனால் என்ன செய்தார்களோ தெரியவில்லை..  என்ன நடந்தது, சரியாக எத்தனை சதவீதம் ஓட்டுக்கள் சென்றது என்பதை அறிய முயற்சித்து வருகிறோம் என்றார். கேஜ்ரிவால் இவ்வாறு முன்கூட்டியே வைக்கும் ஒப்பாரியைக் கண்டு இவருக்கு என்ன ஆச்சு என எல்லோரும் டெல்லியில் கேட்கின்றனாம்.

Tags
Show More
Back to top button
Close
Close