செய்திகள்

கமலஹாசன் சர்ச்சைப் பேச்சு: அறிக்கை கேட்கிறது தலைமைத் தேர்தல் ஆணையம் !!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக, மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் தேர்தல் பிரசாரத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் பேசியதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

இதுகுறித்து அரசியல் கட்சிகள் சார்பில் தரப்பட்ட புகார் மனுக்கள் மீது விசாரித்து அறிக்கை அளிக்கும்படி கரூர் மாவட்டத் தேர்தல் அதிகாரி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதி பொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மீண்டும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. எனவே, தேர்தல் ஆணையத்தின் பதிலை நீதிமன்றத்தில் தெரிவிப்போம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

Tags
Show More
Back to top button
Close
Close