சமூக ஊடகம்

“நான் பணத்திற்காக கிறிஸ்துவ மத பிரச்சாரம் செய்தேன்” : மனம் திறந்த கமல்ஹாசன் – வைரல் வீடியோ

12 ஆழ்வார்களாலோ, 63 நாயன்மார்களாலோ இந்து என்ற மதக்குறிப்பு சொல்லப்படவில்லை. முகலாயர் அல்லது அதற்குமுன் ஆள வந்தாராலோ, இந்து என நாமகரணம் செய்யப்பட்டோம் என இந்து என்ற சொல்லுக்கு கமல்ஹாசன் விளக்கமளித்தார். வரலாறு என்னவென்று தெரியாமல் ஹிந்து மதம் என்ற அடையாளத்தை கமல் அழிக்க துடிப்பது தெளிவாகியுள்ளது என்று பலரும் கருதுகின்றனர்.

இந்த நிலையில், கமல்ஹாசன், தான் பணத்திற்காக கிறிஸ்துவ மத பிரச்சாரம் செய்தேன் என்று அவர் கூறிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த காணொளியில், “நான் கிறிஸ்துவ கலை தகவல் தொடர்பு மையத்தில் சேர்ந்து, பணத்திற்காக கிறிஸ்துவ மத பிரச்சாரம் செய்தேன். நான் எனது சொந்த மதத்தை எப்படி நம்புகிறேனோ அதே அளவிற்கு கிறிஸ்துவ மதத்தை நம்புகிறேன்”, என்று கூறியுள்ளார்.

மேலும் பி.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றிலும், “”நான் கிறிஸ்துவ கலை தகவல் தொடர்பு மையத்தில் சேர்ந்து, கிறிஸ்துவ மத பிரச்சாரம் செய்தேன்”, என்று கூறியுள்ளார். அந்த காணொளியும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அன்பே சிவம் படத்தில், ஹிந்துக்களை இழிவு படுத்தி, கிறிஸ்துவ மதத்தை உயர்த்தி பிடித்து படம் எடுத்த கமல்ஹாசன், தான் பணத்திற்காக கிறிஸ்துவ மத பிரச்சாரம் செய்கிறேன் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் கூறியவாறு, பணத்திற்காக கிறிஸ்துவ மத பிரச்சாரம் செய்வதன் அடுத்த நிலையாக தான், ஹிந்து தீவிரவாதம், ஹிந்து மதம் என்றே ஒன்று இல்லை என்ற தோணியில் கமல் பேசி வருகிறாரா என்ற கேள்வி எழுகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close