சினிமா

ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடித்து வரும் பிரபல ஹாலிவுட் நடிகருக்கு நடந்த கோர விபத்து !!

படப்பிடிப்பில் நடந்த விபத்தில் ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிரேக் காயம் அடைந்தார். இதனையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

பாண்ட் பட வரிசையின் 25 வைத்து படம்,இப்போது தயாராகி வருகிறது. கேரி ஜோஜி புகுநகா இயக்கம் இந்தப் படத்தில் “ஜேம்ஸ்பாண்ட் “டேனியல் கிரேக்குடன் ரால்ப் பியென்னஸ் , நவோமி ஹாரிஸ், ராமி மலேக். ஜெப்ரி ரைட் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் ஜமைக்காவில் நடந்துவந்தது. ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.

வில்லனை ஓடிச்சென்று பிடிப்பது போன்ற காட்சியில், டேனியல் கோர்ட் சூட்டுடன் ஓடினார். அப்போது தடுமாறி கீழே விழுந்ததில் அவர் கணுக்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக, படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இது பெரிய காயமில்லை. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தை, அடுத்த வருடம் ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close