தமிழ் நாடு

அப்போ நான்கிலும் அவுட் – தி.மு.கவின் சூழ்ச்சியை சூசகமாக அம்பலப்படுத்திய எச் ராஜா..!

அதிமுக மீதான திமுகவின் புகாருக்கு, தனது தோல்வியை முன்கூட்டியே அறிந்து திமுக புகார் அளித்துள்ளது என்ற ரீதியில் டிவிட் போட்டுள்ளார் எச் ராஜா.

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளிலும் அதிமுக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக திமுக சார்பில் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி இந்த புகார் மனுவை அளித்தார். இது செய்தியாக வெளியானது. இந்நிலையில் இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் அப்படியானால் நான்கு தொகுதியிலும் திமுக அவுட் என்று அர்த்தம் என பதிவிட்டுள்ளார்.

அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் அதிமுக மீதான திமுகவின் புகாருக்கு, தனது தோல்வியை முன்கூட்டியே அறிந்து திமுக புகார் அளித்துள்ளது என்ற ரீதியில் டிவிட் போட்டுள்ளார் எச் ராஜா

Tags
Show More
Back to top button
Close
Close