செய்திகள்

29 மாநிலங்களிலும் ஏழுமலையான் கோயில்: பக்தர்களைத் தேடி பகவானே புறப்பாடு

நாட்டில் உள்ள 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் ஏழுமலையான் கோயிலைக் கட்டுவதற்கு திட்ட அறிக்கை உருவாக்கப்பட்டு வருவதாக தேவஸ்தானத்தின் திருப்பதி பிரிவு செயல் இணை அதிகாரி லட்சுமிகாந்தம் (படம்) தெரிவித்தார்.

திருப்பதியில் உள்ள தேவஸ்தானத் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை தொலைபேசி வாயிலாக பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இணை அதிகாரி லட்சுமிகாந்தம் பதிலளித்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவஸ்தானத்திற்குச் சொந்தமான கல்யாண மண்டபங்களில் நவீனப்படுத்தும் பணிகள் பல கட்டங்களாக நிறைவேற்றப்பட உள்ளன. திருப்பதியில் உள்ள தேவஸ்தானம் நிர்வகிக்கும் கோயில்களிலும் திருமலையில் வழங்கப்படுவது போல் மூத்த குடிமக்களுக்கு தனி தரிசன வரிசையை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவின் 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் ஏழுமலையான் கோயிலைக் கட்டுவதற்கு திட்ட அறிக்கை உருவாக்கப்பட்டு வருகிறது. அதற்கு அந்த மாநில அரசுகள் 5 முதல் 10 ஏக்கர் நிலம் வழங்கினால் தேவஸ்தானம் அங்கு கோயில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கும் என்றார் அவர்.

Tags
Show More
Back to top button
Close
Close