அரசியல்செய்திகள்

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி நிச்சயம்: சீத்தாராம் யெச்சூரி!!

மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸின் செயல்பாடுகளால் மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறும் என்றும் இதன் மூலம் அங்கு கால் பதிக்க உதவும் வகையில் திரிணாமுல் கட்சி நடந்து கொண்டுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார். 

 இதுகுறித்து செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கம்யூனிஸ்ட் தொண்டர்கள் பாஜகவின் வெற்றிக்கு துணை போவதாக கூறுவது அப்பட்டமான பொய் ஆகும். இது பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களால் திட்டமிடப்பட்டு பரப்பி விடப்படும் பொய்யான தகவல். பாஜகவும், திரிணமூல் காங்கிரஸும் பொய்யான காரணங்களைக் கூறி,மோதலில் ஈடுபட்டு அதன்மூலம் ஆதாயம் அடைய நினைக்கின்றன.

திரிணமூல் காங்கிரஸார் கடந்த 1998ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால்,அவர்கள் ஆட்சியில் அமர்ந்ததும், பாஜகவினரை மதவாத சக்திகள் என்றும், இட ஒதுக்கீடுக்கு எதிரானவர்கள் என்றும் இப்போது விமர்சிக்கிறது. இதனால்  திரிணமூல் காங்கிரஸார் விமர்சனம் மற்றும் பிரச்சாரம் அங்கு எடுபடாமல் போக வாய்ப்புள்ளது. 

இது பாஜக வெற்றிக்கே வழிவகுக்கும். ஆனால் எங்கள் நிலைப்பாடு மிக தெளிவானது. தேர்தலில் மக்கள் அமைதியாகவும்,பாதுகாப்புடனும் வாக்களிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தவும், வாக்குப்பதிவில் முறைகேடுகளில் ஈடுபடாமல் தேர்தலை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார் அவர். 

Tags
Show More
Back to top button
Close
Close