இந்தியா

‘தி ரியல் மோடி’.. கடைக்கு வந்த உடனே காலியாகும் புத்தகம் – மலைக்க வைக்கும் ஆதரவு மக்களிடத்தில் பெருகியதன் பின்னணி.!

பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை பற்றி எழுதப்பட்டுள்ள, ‘தி ரியல் மோடி’ என்ற புத்தகம், உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் அமோகமாக விற்பனையாகிறது.

உ.பி.,யில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசி லோக்சபா தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார். இங்கு நாளை தேர்தல் நடக்கஉள்ளது.கோவில் நகரமான வாரணாசியில்,ஏராளமான புத்தக கடைகள் உள்ளன. தற்போது, தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி பற்றிய புத்தகங்கள் அமோகமாக விற்பனையாவதாக, புத்தக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்து, அரவிந்த் சதுர்வேதி எழுதியுள்ள, ‘தி ரியல் மோடி’ என்ற புத்தகம், வந்தவுடனேயேகாலியாகி விடுவதாக, புத்தக கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் இந்த புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ‘தி ரியல் மோடி’ புத்தகத்தின் அட்டைப் படம், ‘கட் அவுட்’களாக தயாரிக்கப்பட்டு, பா.ஜ.கவின் பிரசாரத்தில் பயன் படுத்தப்படுகிறது.இதனால், இந்த புத்தகத்தின் மீது, மக்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளதாக, புத்தக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags
Show More
Back to top button
Close
Close