செய்திகள்

மகாத்மா காந்தியை பாகிஸ்தானின் தந்தை என குறிப்பிட்ட பாஜக நிர்வாகி நிரந்தர சஸ்பெண்ட்!!

மகாத்மா காந்தியை’ பாகிஸ்தானின் தேச தந்தை என குறிப்பிட்ட, மத்திய பிரதேச பா.ஜ.க நிர்வாகி அனில் சவுமித்ரா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான தனது முகநூல் பதிவில், காந்தியை போல் பல கோடி மக்கள் பிறந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், சிலர் மட்டுமே நாட்டுக்கு உபயோகமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த சர்ச்சை பதிவுக்கு கண்டனம் தெரிவித்து, பா.ஜ.க அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிய நிலையில், 7நாட்களுக்குள் விளக்கமளிக்கும்படி மத்திய பிரதேச பாஜக தலைவர் ராகேஷ் சிங் உத்தரவிட்டுள்ளார்.

 அதேபோல மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என புகழ்ந்த பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூரை, தாம் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
Close
Close