இந்தியா

இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் பாகிஸ்தான் – பயணிகள் விமானம் வானில் பறக்கவே இன்னும் தடையா..?

பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீரில் உள்ள பாலகோட் பகுதிக்குள் கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விமானப்படைகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உள்பட பல விமான நிலையங்களை பாகிஸ்தான் அரசு அவசரமாக மூடியது.

இதேபோல் சில நகரங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களும், உள்நாட்டு விமான நிலையங்களும் மூடப்பட்டன. பிப்ரவரி மாதம் 27-ம் தேதியில் இருந்து சில நகரங்களின் வான் எல்லை வழியாக வெளிநாட்டு விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர், சில முக்கிய விமான நிலையங்கள் வழியாக மிக குறைவான விமானச் சேவைகள் இயக்கப்பட்டன.

அதன் பிறகு இந்திய பயணிகள் மட்டும்  விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் பறக்க அந்நாடு தடைவிதித்துள்ளது. இதற்கிடையே இந்த தடையை இந்த மாதம் 30 ம் தேதிவரை நீட்டிக்க பாகிஸ்தான் ராணுவம் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close