இந்தியா

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் பா.ஜ.க..? நீண்ட காலத்துக்கு பிறகு அபாரமான மெஜாரிட்டி – கூட்டாக வெளியிடப்பட்ட அறிவிப்பு.!

பாராளுமன்ற தேர்தலில் 7-வது கட்ட வாக்குப்பதிவை சந்திக்கும் 59 தொகுதிகளில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஒருநாள் முன்கூட்டியே 9 தொகுதிகளில் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டது. தவிர்த்து மீதமுள்ள 50 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று மாலை செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.

அப்போது, கடந்த 2014-ம் ஆண்டில் பெற்ற வெற்றியைவிட அபாரமான மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம் என அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த தேர்தலில் 16-5-2014 அன்று முடிவுகள் வெளியானபோது காங்கிரஸ் வெற்றிபெறும் என்று பந்தயம் கட்டி இருந்தவர்கள் எல்லாம் மிகப்பெரிய தொகையை இழந்தனர். இந்த முறையும் அதை காணலாம்.

இந்த நாட்டின் வரலாறில் நீண்ட காலத்துக்கு பிறகு அபாரமான மெஜாரிட்டியுடன் இரண்டாவது முறையாக தொடர்ந்து நாங்கள் ஆட்சி அமைப்போம் என மோடி தெரிவித்தார்.

Tags
Show More
Back to top button
Close
Close