செய்திகள்

கமலஹாசன் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட வாய்ப்பு …பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு!!

கமலஹாசன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கான ஆதாரங்களை, ஆகஸ்ட் 2ம் தேதி தாக்கல் செய்ய டெல்லி பட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் பிரசாரத்தின் போது பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், இந்து சேனா அமைப்பை சேர்ந்த விஷ்ணுகுப்தா என்பவர், கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கமலஹாசன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கான ஆதாரங்களை ஆகஸ்ட் 2ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆதாரங்கள் பெறப்பட்டதும் கமலஹாசனுக்கு எதிரான வழக்கின்படி உடனடி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மற்றொரு மோசடி வழக்கில் நோட்டீஸ்

இதற்கிடையே கடந்த 2008ஆம் ஆண்டு, மர்மயோகி திரைப்படத்தை தயாரிப்பதற்காக பிரமிட் சாய்மீரா நிறுவனம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு 4 கோடி ரூபாய் அட்வான்ஸ் வழங்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், மர்மயோகி படத்தை தயாரிக்காமல், உன்னைபோல் ஒருவன் படத்திற்கு, அந்த பணத்தை கமல்ஹாசன் செலவு செய்ததாக புகார் எழுந்தது. இதற்காக கொடுத்த  4 கோடி ரூபாயை, வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 44 லட்சம் ரூபாய் கொடுத்த பிறகே, விஸ்வரூபம்-2 படத்தை வெளியிட வேண்டும் என்று பிரமிட் சாய்மீரா நிறுவனம் புதிய வழக்கை தொடர்ந்தது.  இது தொடர்பாகவும் கமலஹாசனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close