செய்திகள்

மலேசியா முருகனுக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் !! கோவிலில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிப்பு !!

ஐ.எஸ் பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் நால்வர் கைதானதை அடுத்து கோலாலம்பூரில் பத்துமலை முருகன் கோவில் உள்ளிட்ட மூன்று கோவில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ‘த ஸ்டார்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

சீஃபீல்ட் மாரியம்மன் கோவிலில் கடந்தாண்டு நேர்ந்த கலவரத்தில் தீயணைப்பாளர் முகம்மது அடிப் முகம்மது காசிம் உயிரிழந்ததற்காகப் பழிவாங்க அந்தக் கோவில்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக ஆலய நிர்வாக அமைப்பான ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானம் அறிக்கை ஒன்றில் வியாழக்கிழமை கூறியது. 

அந்த மூன்று கோவில்களிலும் பாதுகாப்பு அதிகாரிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாக அமைப்பு கூறியிருந்தது. அத்துடன், வருகையாளர்களின் பைகள் அவ்வப்போது பரிசோதிக்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close