செய்திகள்

நாதுராம் கோட்செவை தேசபக்தர் என்று சொல்பவர்களை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்…பிரதமர் மோடி ஆவேசம்!!

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என புகழ்ந்த பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூரை, தாம் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர், மத்திய பிரதேசத்தின், போபால் தொகுதி பாஜக வேட்பாளராக, நிறுத்தப்பட்டுள்ளார்.

நாதூரம் கோட்சே என்றும் எப்போதும் உண்மையான தேசபக்தர் என்று நேற்று புகழ்ந்த அவர், கோட்சேவை தீவிரவாதி என்பவர்களுக்கு, தேர்தல் மூலம், தக்க பாடம் புகட்டப்படும் எனக் குறிப்பிட்டார்.

தேசத் தந்தை மகாத்மா காந்தியை கொலை செய்த ஒருவரை தேசபக்தர் என புகழ்வதா என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

கோட்சே குறித்த பிரக்யா சிங் தாக்கூரின் கருத்து ஏற்புடையது அல்ல என்றும், உடனடியாக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் அறிவுறுத்தினார்.

இதையடுத்து, நாதூராம் கோட்சேவை தேசபக்தர் என்று கூறியதற்கு, மன்னிப்புக் கோருவதாக, பிரக்யா சிங் தெரிவித்தார்.

இந்நிலையில், எதிர்காலத்தில் இத்தகைய கருத்துகளை தெரிவிப்பதற்கு முன்னர், பிரக்யா சிங் தாக்கூர் போன்றவர்கள் நூறு முறை யோசிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தான் கூறிய கருத்துக்காக பிரக்யா சிங் மன்னிப்புக் கேட்டுவிட்டது வேறு விஷயம் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், அவரை தாம் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close