செய்திகள்

குப்பை தொட்டிகளில் இந்து தெய்வம் படம்: கொந்தளித்த இந்துக்கள் ! சூடுபறக்கும் #Boycott Amazon ‘ஹாஷ்டாக்’!!

Amazon.com இணையத்தளத்தில் விற்கப்படும் கழிவுத் தொட்டி மூடி மற்றும் பல பொருட்களின் மீது இந்துக் கடவுளின் படத்தைப்போட்டு விற்கப்படுவதாகக் கூறி சமூக ஊடகங்களில் இந்தியர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மும்பை மற்றும் டெல்லியில் உள்ள இந்துக்கள் மட்டுமல்லாமல் அமேரிக்கா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் வாழும் இந்துக்களும் அமேசான் நிறுவனத்துக்கு எதிராக தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது #BoycottAmazon எனும் ‘ஹாஷ்டாக்’ இணையதளங்களில் சூடு பறக்கிறது. 

Amazon.com இணையத் தளத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள ஆயிரக் கணக்கானவர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜையும் வலியுறுத்தியுள்ளனர். சுஷ்மா ஸ்வராஜும் இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

அந்த நிறுவனம் ஏற்கனவே தாங்கள் விற்கும் கால் செருப்புகளில் இந்து தெய்வங்களின் படத்தை வரைந்து சர்ச்சை ஏற்படுத்தியது. அப்போது இந்து நெட்டிசன்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். சுஷ்மா ஸ்வராஜு தலையிட்டதை அடுத்து அந்த நிறுவனம் மன்னிப்பு கேட்டதுடன் அந்த படங்கள் அடங்கிய பொருட்களை சந்தையில் இருந்து வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.  

Tags
Show More
Back to top button
Close
Close