செய்திகள்

ரமலான் நோம்பு காலத்தில் மாற்று மதத்தினர் உணவு உண்டதால் 80 பேர் கைது செய்யப்பட்டனர்!!!

இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சி நடைபெற்றுவரும் நைஜீரியாவின் கானோ மாநிலத்தில் ரமலான் நோம்பு காலத்தில், பொது இடத்தில உணவு சாப்பிட்டதாக 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேற்காபிரிக்கா நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் இஸ்லாமியர்களும் கிருத்தவர்களும் சம அளவில் வாழ்கின்றனர்.நாட்டின் வடபகுதியில் உள்ள சில மாநிலங்களில் மட்டும் இஸ்லாமிய “ஷரியத் ” சட்டதிட்டங்களை மீறிய வகையில் செயல்படுவர்களை கண்டுபிடித்து தண்டிக்க “ஹிஸ்பா” எனப்படும் போலீஸ் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கானோ மாநிலத்தில் ரமலான் நோம்பு காலத்தின் போது பொது இடத்தில உணவு சாப்பிட்டதாக 80 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களாக கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் மாலைவரை காவலில் வைத்து எச்சரித்து விடுவிக்கப்பட்டனர்.

இது நைஜீரியாவில் மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகள்லயும் ரமலான் நோம்பு நேரத்தில் மற்ற மதத்தினர் சாப்பிட கூடாது என்று சட்டம் உள்ளது

Tags
Show More
Back to top button
Close
Close