சினிமா

தனது குண்டு உடலை மீண்டும் இஞ்சி இடுப்பாக்கிக் கொண்டது எப்படி? நூல் எழுதி வெளியிட்டுள்ளார் நடிகை அனுஷ்கா!!

அனுஷ்கா திடீரென உடல் எடையைக் குறைத்திருப்பது ரசிகர்களை உற்சாகப்பட வைத்துள்ளது. இந்நிலையில் உடல் எடையைக் குறைத்த அனுபவத்தை ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளாராம். 

‘இஞ்சி இடுப்பழகி’ படத் துக்காக உடல் எடையைக் கன்னாபின்னாவென்று அதிகரித்துக் கொண்டார் அனுஷ்கா. படம் வெற்றியோ தோல்வியோ, நஷ்டம் மட்டும் அனுஷ்காவுக்குத்தான்.

ஏற்றிய எடையை அவரால் குறைக்கவே முடியவில்லை. யோகா கலையில் நன்கு தேர்ச்சி பெற்றவர் என்றாலும் அதுவும் அவருக்குக் கைகொடுக்கவில்லை.

இந்நிலையில் பிரபல உணவுக் கட்டுப்பாட்டு நிபுணர் கோட்பின் ஹோ உதவியுடன் உடல் எடையைக் குறைப்பதற்கான நடவடிக்கைககளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதன் பலனாக 10 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அனுஷ்காவைப் போலவே பளிச்சென வலம் வரத் துவங்கியுள்ளார் அனுஷ்கா. இந்நிலையில் தனக்குக் கைகொடுத்த கோட் இன் ஹோவுடன் இணைந்து உடல் எடைக்குறைப்பு அனுபவத்தை ஆங்கிலத்தில் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார் அனுஷ்கா. இதை பிரபல நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close