செய்திகள்

ரஜினிகாந்துடன் ஏ.சி.சண்முகம், பொன்ராஜ் திடீர் சந்திப்பு ஏன்? சில தகவல்கள்.!!!

நடிகர் ரஜினிகாந்தை இன்று புதிய நீதிக்கட்சி தலைவரும், வேலூரில் அதிமுக சின்னத்தில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தவருமான ஏ.சி.சண்முகம் சந்தித்து பேசினார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லதுக்கு சென்ற ஏ.சி.சண்முகம் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அவருடன் பேசியதாக கூறப்படுகிறது.

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ள நிலையில், அது பற்றியும் இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. நேற்று அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் ரஜினியை சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் திருச்சியில் கட்டப்பட்டுள்ள ரஜினிகாந்தின் பெற்றோரின் மணிமண்டப கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து மே 23-ஆம் தேதிக்கு பிறகு அறிவிப்பார்.

ஒரு நல்ல முடிவை அவர் அறிவிப்பார். சில திட்டங்களை அறிவிப்பார், அரசியல் சூழ்நிலையை அவர் உற்று நோக்கி வருகிறார் என்றார். இதனடிப்படையில் இவர்கள் சந்தித்திருக்கலாம் என்றும், மே 23-ஆம் தேதிக்கு பிறகு மேலும் பல புள்ளிகள் ரஜினியை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close