2019 தேர்தல்அரசியல்இந்தியாசெய்திகள்

இந்தியாவில் பிரச்சினை ஏற்படும்போதெல்லாம் இத்தாலிக்கு ஓடும் ராகுல்” – யோகி ஆதித்தியநாத் கடும் தாக்கு!

உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத், லக்னோவில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது;-

எப்போதெல்லாம் நமது நாட்டில் பிரச்சினை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் இத்தாலிக்கு ஓடிவிடுவார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

ராகுல் காந்திக்கும், அவரது தங்கை பிரியங்கா காந்திக்கும் நமது மக்களுடன் என்ன தொடர்பு இருக்கிறது? பேசாமல் அவர்கள் இத்தாலிக்கு சென்றுவிடலாம். அங்கேயே ஓட்டும் போட்டுக்கொள்ளலாம்.

அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழலில் இடைத்தரகராக செயல்பட்ட ராகுல் காந்தியின் சகுணி மாமா கிறிஸ்டியன் மைக்கேலை, இத்தாலிக்கு தப்பி ஓடவிட்டது காங்கிரஸ். ஆனால், அவரை இந்தியாவுக்கு இழுத்துவந்ததார் பிரதமர் நரேந்திர மோடி.

காங்கிரசார், எப்போதுமே அவர்களின் குடும்பத்தினர் மீதுதான் அதிக விஷ்வாசமாக இருபார்கள். மாறாக நம் நாட்டு மக்கள் மீது ஒருபோதும் அக்கரை காட்ட மாட்டார்கள்.

இவ்வாறு யோகி ஆதித்தியநாத் கூறினார்

Tags
Show More
Back to top button
Close
Close