விளையாட்டு

கோலியின் கேப்டன் பதவியை காலி செய்ய திட்டம்!!அடுத்த கேப்டன் ரோஹித் ஷர்மா?

தோனியை அடுத்து இந்திய அணியை வழிநடத்தி செல்கிறார் கோலி தோனியை பொறுத்தவரை ஆட்டத்தின் போக்கை கணித்தல், புரிதல் ஆகியவற்றில் தோணி வல்லவர். மிகச்சிறந்த கேப்டனான் தோனியின் இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

அப்படியான ஒரு சவாலை எதிர்கொள்பவர் கோலி. 19 வயதிற்குட்பட்ட இந்திய அணியை வழிநடத்திய அனுபவம் கொண்டவர் கோலி. 19 வயதிற்குட்பட்ட உலக கோப்பையை இந்தியாவிற்கு பெற்று தந்தவர் கோலி, அதனால் தோனிக்கு அடுத்து கோலி இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்ய பட்டார்.

கேப்டன் ஆனா உடனேயே கோலியின் கேப்டன்சியை தோனியுடன் ஒப்பிட முடியாது.அப்படி ஒப்பிட்டு பார்த்தாலும் கோலியின் கேப்டன்சி கொஞ்சம் மோசம் தான்.கள வியூகம், இக்கட்டான சூழ்நிலைகளில் சாமர்த்தியமான திட்டங்களை தீட்டுவது,வீரர்களை கையாளும் விதம்,பவுலர்களை பயன்படுத்தும் முறை ஆகியவற்றில் ஒரு கேப்டனாக கோலி இன்னும் மேம்பட வேண்டியிருக்கிறது.

ipl லில் 4 முறை கோப்பையை வென்று கேப்டன்சியில் வெற்றிகரமாக திகழ்கிறார் ரோஹித் சர்மா.கோலி ஒருமுறை கோப்பையை வெல்லவே திணறுகிறார். IPL லில் தோனியை விட ரோஹித் சிறந்த கேப்டனாக திகழ்கிறார்.கோலி தலை சிறந்த பேட்ஸ்மேன் என்பது உலகம் அறிந்த விஷயம்,ஆனால் கேப்டன்சியை பொறுத்த வரையில் கோலியை விட ரோஹித் பெட்டர்.

கோலி கேப்டன்சியை கடுமையாக விமர்சித்தவர் காம்பீர் தான்.இந்நிலையில் ESPN கிரிக் இன்ஃபோ இணையதளத்திற்கு பேட்டி அளித்த கவுதம் காம்பீரிடம், இந்தியாவின் அடுத்த கேப்டன் ஆப்ஷனாக ரோஹித் இருப்பாரா என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு காம்பீர் கூறியதாவது, ரோஹித் சர்மா IPL லில் 4 முறை கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார், அதுமட்டுமல்ல ஆசிய கோப்பையையும் சிறப்பாக செயல்பட்டு வென்று கொடுத்திருக்கிறார், அதனால் ஆப்ஷனெல்லாம் கிடையாது கூடிய விரைவில் ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டன் ஆவார் என்று காம்பீர் கூறினார்.

Tags
Show More
Back to top button
Close
Close