2019 தேர்தல்அரசியல்செய்திகள்

ராகுலுக்கும், லாலுவுக்கும் ஆயிரம் கோடிகளில் சொத்து வந்தது எப்படி?? ஊழல் குடும்பங்கள் குறித்து பிரதமர் மோடி சரமாரி கேள்வி!!

பீகாரின் பளிகஞ்ச் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, காங்.,கின் எஜமானர் குடும்பம் மற்றும் பீகாரின் ஊழல் குடும்பத்திற்கும் தற்போது ஆயிரம் கோடிகளில் சொத்து உள்ளது. இந்த பணம் எங்கிருந்து வந்தது? இவர்கள் நாட்டை பற்றியும்,ஏழைகளை பற்றியும் சிறிதாவது அக்கறை காட்டியதுண்டா? அவர்களின் கவனம் முழுவதும் ஊழல் செய்வதில் தான் உள்ளது.

மிக உயரத்தில் வசிக்கும் அவர்களால் ஏழைகளின் வலியை காண முடியாது. நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை இழந்தவர்களை பற்றி அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை. இப்போது கூட எப்படி கொள்ளையடிக்கலாம் என்று தான் அவர்கள் கண்களை திறந்து வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

2022 ல் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்கு ஆக்குவோம் என நாங்கள் வாக்குறுதி அளித்துள்ளோம். அவர்களை சோலார் மின்சாரம் வழங்குபவர்களாக மாற்றவும் முடிவு செய்துள்ளோம். நீங்கள் என்னை ஏற்றுக் கொண்டு மீண்டும் பிரதமர் பதவி கொடுத்த பிறகு அதிக அளவிலான வளர்ச்சி திட்டங்களுடன் திரும்பி வருவேன் என்றார்.

Tags
Show More
Back to top button
Close
Close