2019 தேர்தல்செய்திகள்தமிழ் நாடு

இனிமேல் இப்படி பேசுவாரா கமல்! கமல்ஹாசன் மீது காலணி வீச்சு?

இந்துக்களை தீவிரவாதியாக சித்தரித்த நடிகர் கமல்ஹாசன் மீது காலணி வீச முயன்ற இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து சன்னதி தெருவில் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார்.

அப்போது இந்து முன்னணி மற்றும் அனுமன் சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூட்டத்தில் கமலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதுடன், காலணி வீசவும் முயன்றனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

கமலுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய மற்றும் காலணி வீச முயன்ற 11 பேரை திருப்பரங்குன்றம் போலீசார் கைது செய்தனர். பின்னர் காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.

Tags
Show More
Back to top button
Close
Close