2019 தேர்தல்அரசியல்செய்திகள்

பிரதமரின் கருத்து மிகச் சரியானது தீவிரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது – தமிழிசை சௌந்தரராஜன்

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எஸ்.மோகன்ராஜை ஆதரித்து, அங்குள்ள பள்ளப்பட்டியில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பிரசாரம் செய்தார்.  அப்போது அவர், “சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து; அவர்தான் நாதுராம் கோட்சே” என்று பேசினார். இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கமல்ஹாசனின் இந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பிரதமர் மோடி பேட்டி அளிக்கையில், கமல்ஹாசனின் பேச்சுக்கு பதிலளித்து கூறும் போது, எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது. ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் நிச்சயம் அவர் இந்துவாக இருக்க முடியாது.  உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை” என்று பேசினார். 

இந்த நிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “தீவிரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது, பிரதமரின் கருத்து மிகச் சரியானது” என்றார். 

Tags
Show More
Back to top button
Close
Close