செய்திகள்

ஐ.எஸ் அமைப்பிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு கமல் பேச்சு : அவரை இனி வெளியில் நடமாட விட மாட்டோம்!! ஸ்ரீரங்கம் ஜீயர் ஆக்ரோஷம்

முஸ்லீம் தீவிரவாத அமைப்புகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு இந்து விரோதமாக பேசும் கமலஹாசனை இனி வெளியில் நடமாட விட மாட்டோம் என, ஸ்ரீரங்கத்தில், மன்னார்குடி செண்பகமன்னார் ஜீயர் தெரிவித்தார்.

அவர் சினிமாவில் பேசுவது போலவே வெளியில் பேசி நடிக்கிறார் . நாதுராம் கோட்சே இந்துமத பற்றின் மேல் காந்தியை படுகொலை செய்யவில்லை. நாட்டுப்பற்றின் மீது அவர் கொண்ட வெறியால் ஒரு கொலைக்குற்றத்தை செய்ததாகவே அனைவராலும் உணரப்பட்டது. அதை அவரே தனது வாக்கு மூலம் மூலம் கூறியுள்ளார். எந்த இடத்திலும் இந்து என்ற வார்த்தையையோ அல்லது எந்த ஒரு அமைப்பையோ அவர் காரணமாக கூறவில்லை. அவர் செய்தது ஒரு தனிமனித குற்றம். அவரின் முடிவின்படி அவர் செய்துள்ளார். உச்ச நீதிமன்றமே கூட கோட்சேவை தீவிரவாதி என கூறவில்லை. அவர் ஒரு கொலையாளி அவ்வளவுதான். இந்து என்ற வார்த்தைக்கும் இந்த இடத்துக்கும் பொருத்தமே இல்லை. கமலஹாசன் லஞ்சம் வாங்கிக்கொண்டே இவ்வாறு பேசியுள்ளார். அவரை இனி வெளியில் நடமாட விடமாட்டோம் இவ்வாறு ஜீயர் வேதனையுடன் ஆக்ரோஷத்துடன் கூறினார்.

Tags
Show More
Back to top button
Close
Close