செய்திகள்

“ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்கக் கோரும் தீவிரவாதி சங்க பரிவார் அமைப்புகளை குறை கூறுவதா ?” வைகோ-விற்கு ஹெச். ராஜா பதிலடி

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எஸ்.மோகன்ராஜை ஆதரித்து, அங்குள்ள பள்ளப்பட்டியில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பிரசாரம் செய்தார்.  அப்போது அவர், “சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து; அவர்தான் நாதுராம் கோட்சே” என்று பேசினார். இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கமல்ஹாசனின் இந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ம.தி.மு.க பொது செயலாளர் திரு வைகோ, கமலஹாசனுக்கு முட்டு கொடுக்கும் வகையில், கமலஹாசன் கூறியதில் எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ளார். இதற்கு பா.ஜ.க தேசிய செயலாளர் திரு ஹெச். ராஜா பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள கீச்சில், “கோட்சேவையோ அல்லது அவரோடு குற்றம் சாட்டப்பட்டவர்களையோ விடுதலை செய்யச் சொல்லி சங்க பரிவார் அமைப்புகளின் கோரவில்லை. ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்கக் கோரும் தீவிரவாதி சங்க பரிவார் அமைப்புகளை குறை கூறுவதா ?”, என்று பதிவிட்டுள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close