தமிழ் நாடு

ஸ்டாலின் என்னும் குழப்பவாதி ! ஒவ்வொரு திசையில் ஒவ்வொரு கட்சியுடன் பேச்சுவார்த்தை !

கருணாநிதி மறைந்த பிறகு தி.மு.க வின் தலைவராக பொறுப்பேற்று கொண்டார் ஸ்டாலின். அதன்பிறகு கட்சி சார்ந்த அனைத்து முடிவுகளையும் ஸ்டாலினே எடுக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருணாநிதியின் சிலையை திறந்து வைக்க ராகுல் மற்றும் சோனியா சென்னை வந்தனர். அப்பொழுது நடந்த கூட்டத்தில் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார். இதை எந்த எதிர்கட்சியினரும் ஏற்கவில்லை. பல எதிர்ப்பு குரல்கள் வந்தவண்ணம் இருந்தன.

இதன்பிறகு கோல்கட்டாவில் மம்தா தலைமையில் நடந்த எதிர்கட்சியினரின் மாபெரும் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் இடம் பெறவில்லை. அப்போதே அனைவரும் குழம்பினர். கடந்த வருடம் தெலங்கானா முதல்வரை சென்னைக்கு அழைத்து விருந்து அளித்தார். அது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றாலும், ஸ்டாலின் மூன்றாம் அணியின் பக்கம் செய்கிறாரா என்ற குழப்பம் இருந்தது.

காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்த ஸ்டாலின் மீண்டும் சந்திரசேகர ராவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதற்கு ஒரு படி மேலே, பா.ஜ.க தலைவர் தமிழிசை அளித்த பேட்டியில் ஸ்டாலின் மோடியுடன் பேச்சுவார்த்தை நடுத்துக்கறார் என்றார். இது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தினமும் மோடியை வசைபாடிவிட்டு, மோடியுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையா என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எப்படியாவது பதவிக்கு வந்துவிட வேண்டும் என்று துடிக்கிறார் ஸ்டாலின் என்ற எண்ணம் தோன்றுகிறது. இப்படி ஒரு குழப்பவாதியை கண்டதில்லை தமிழகம் .

Tags
Show More
Back to top button
Close
Close