சினிமா

திடீரென கைவிட்டு போக இருந்த இந்தியன் 2, நேரம் பார்த்து தோள் கொடுத்த பிரபலம்? இயக்குனர் ஷங்கருக்கு உதவிய நல்லுள்ளம்?

தமிழ் சினிமாவின் பெரிய பட்ஜெட் இயக்குனர் ஷங்கர் அடுத்து இயக்கவிருக்கும் இந்தியன்2 படத்தினை லைகா நிறுவனம் தான் தயாரிக்கவிருந்தது. ஆயினும், படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. லைகா நிறுவனம் பின்வாங்கிவிட்டது என்றும் சொல்லப்படுகிறது. அந்த வகையில் படம் கைவிட்டு போகும் என கூறப்படும் நிலையில் ஷங்கர் அடுத்து ரிலையன்ஸ் நிறுவனத்தை அணுகியுள்ளார். அதற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான் உதவியுள்ளார். இந்தியன்2விற்கு அனிருத் தான் இசை அமைக்கவிருந்தாலும் ரகுமான் பெருந்தன்மையுடன் ஷங்கருக்கு உதவி கரம் நீட்டியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ஷங்கர் தன் கதை மற்றும் படத்தின் கதாபாத்திரம் மற்றும் முக்கிய காட்சிகள் குறித்து தனியாக ஒரு புத்தகம் போல தயாரித்து ரிலையன்ஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் அனுப்பி கொடுத்துள்ளார். அடுத்து இந்தியன்2 படத்தை யார் தயாரிப்பார்கள் என்பது கூடிய சீக்கிரம் தெரியும் என கூறப்படுகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close