2019 தேர்தல்அரசியல்செய்திகள்தமிழ் நாடு

ஓடவும் முடியவில்லை? பிரச்சாரத்திற்கு போகவும் முடியவில்லை? பயந்து ஒளிந்து கொண்ட கமலஹாசன்?

தேர்தல் பிரசாரத்தின்போது ‘இந்து பயங்கரவாதி’ என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது இந்து மக்கள் அனைவரும் கமல் மீது கடும் கோபத்தில் உள்ளனர் இதனிடையே அவரது பிரசாரம் நேற்று 2-வது நாளாக ரத்து செய்யப்பட்டது.

இடைத்தேர்தல் நடைபெறும் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. பிரச்சாரத்தின் போது இந்துக்கள் தான் முதல் தீவிரவாதி என பேசிய கமல் இப்போது வெளியே வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஓடவும் முடியாமல் ஒளிந்து கொண்டிருக்கிறார் கமலஹாசன்

இப்படி எதிர்ப்பு வலுத்து வருகிற நிலையில், அரவக் குறிச்சி தொகுதியில் நேற்று முன்தினம் கமல்ஹாசன் தனது பிரசாரத்தை ரத்து செய்தார். இது அவரது கட்சியினருக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

இந்த நிலையில் ஓட்டப் பிடாரம் தொகுதியில் நேற்று மேற்கொள்ள இருந்த பிரசாரம் 2-வது நாளாக ரத்து செய்யப்பட்டது. ஓட்டப்பிடாரத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆதரவு பெற்ற வளரும் தமிழகம் கட்சி வேட்பாளர் எம். காந்தியை ஆதரித்து கமல்ஹாசன் நேற்று மாலையில் வீதி, வீதியாக சென்று பிரசாரம் செய்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. அது ரத்து செய்யப்பட்டு விட்டது.

உருவபொம்மை எரிப்பு

பிரசாரம் செய்வதற்கு அரசு தரப்பில் இருந்து முறையான அனுமதி கிடைக்காததால்தான் கமல்ஹாசன் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நாகர்கோவில் வடசேரியில் கமல்ஹாசனின் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடந்தது.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் அமைந்துள்ள கமல்ஹாசன் வீட்டை முற்றுகையிடப் போவதாக பல்வேறு இந்து அமைப்புகள் அறிவிப்பு வெளியிட்டன.

அதைத் தொடர்ந்து, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் வீடு மற்றும் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில், 10 போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி ஐகோர்ட்டில் கமல்ஹாசனுக்கு எதிராக வக்கீல் அஸ்வினி குமார் உபாத்யாயா ஒரு வழக்கை தொடுத்துள்ளார். மேலும், அவர் டெல்லி ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் அமர்வில் ஆஜராகி, தனது வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்.
அதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, இந்த வழக்கை புதன்கிழமையன்று (இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.
இந்து சேனா அமைப்பு சார்பில் அதன் தலைவர் விஷ்ணுகுப்தா டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த வழக்கில், “கமல்ஹாசன் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தில் பயங்கரவாதத்தோடு இந்து மதத்தை தொடர்புபடுத்தி பேசியதின் மூலம் இந்து மக்களின் மத உணர்வுகளை காயப்படுத்தி இருக்கிறார். எனவே இந்திய தண்டனை சட்டத்தின் அடிப்படையில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீதான விசாரணை வியாழக்கிழமையன்று (நாளை) பாட்டியாலா ஹவுஸ் கோட்டில் நடைபெறுகிறது.

கமல்ஹாசனின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி டெல்லி மந்திர் மார்க் போலீஸ் நிலையத்தில் அகில பாரத இந்து மகாசபா சார்பில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கமல்ஹாசனின் சர்ச்சை பேச்சுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புகார்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
Close
Close