செய்திகள்

பாதுகாப்பு துறை ஒப்பந்தங்கள் என்றாலே காங்கிரசுக்கு ஏடிஎம் மெஷின் மாதிரிதான் ! பிரதமர் மோடி கலாய்ப்பு!!

பாதுகாப்பு துறை ஒப்பந்தங்களை பணம் எடுக்கும் ஏடிஎம் மெசின் போல காங்கிரஸ் கட்சி பயன்படுத்தியதாக பிரதமர்மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

70 சதவீத பாதுகாப்பு உபகரணங்களை பெற வெளிநாடுகளையே நம் நாடு நம்பியிருப்பதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என இமாச்சல பிரதேச மாநிலம் சோலானில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ஒப்பந்தங்கள் அனைத்தையும் பணம் எடுக்கும் ஏடிஎம் இயந்திரம் போல காங்கிரஸ் பயன்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்திய பாதுகாப்பு படைகளுக்கு குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் வாங்குவதற்கு காங்கிரஸ் அரசு 6 ஆண்டுகள் தாமதப்படுத்தியதாகவும் பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close