செய்திகள்

மயிலாடுதுறையில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் மீது கல் கல்வீச்சு!! 6 இஸ்லாமிய வாலிபர்கள் சிறையில் அடைப்பு !!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை தனியார் மெட்ரிக் பள்ளியில் கோடைகால ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் நடைபெற்றுவருகிறது. இந்த முகாமில் ஏராளமானோர் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இப்பயிற்சி முகாம் குறித்து அறிந்த அதே ஊரை சேர்ந்த முஸ்லிம் வாலிபர்கள் சிலர் வேண்டுமென்றே முகாம் நடைபெறும் இடத்தின் வாசல் முகப்பில் கல்லெறி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு இரவு நேர பாதுகாப்பாளராக பணிபுரிந்த துரை சண்முகம் மீதும் வேண்டுமென்றே கல்வீசியுள்ளனர்.

மேலும் தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக பேசியுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை கொண்டு ஜாசிக், முகமது சபிக்,முகமது அல்பா உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் வாலிபர்கள் எந்த தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள், அவர்கள் யார் தூண்டுதல் பேரில் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags
Show More
Back to top button
Close
Close