செய்திகள்

பிரதமர் மோடி பயன்படுத்தியது தனது மெயில் என்று ஒருபோதும் கூறவில்லை !! சர்ச்சை செய்யும் கோழைகளுக்கு நெட்டிசன்கள் கொச்சை பதிலடி !!

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே இமெயிலை பயன்படுத்தியதாக கூறி இணையவாசிகளின் கிண்டலுக்கு பிரதமர் மோடி ஆளாகி உள்ளதாக வேண்டுமென்றே மோடி எதிர்ப்பாளர்கள் தவறாக சித்தரிக்கப்பட்ட செய்திகளை பரப்பி வருகிறார்கள். இதற்கு மோடி ஆதரவாளர்களும் சரியான பதிலடி கொடுத்துள்ளனர்:

மோடி ஒன்றும் விவரம் தெரியாதவர் இல்லை. அவர் குஜராத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, சாதாரண பள்ளிகளில் படித்து, தனது உயர் கல்வி மீதுள்ள ஆர்வத்தால் தொலைதூர கல்வி மூலம் பட்டங்களை பெற்று தன்னை மேம்படுத்திக் கொண்டவர்.  குஜராத் மொழி உட்பட சமஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம், உருது உட்பட  பல மொழிகளில் பேசக்கூடியவர். ஒரு சிறிய குறிப்புச்சீட்டுக் கூட இல்லாமல் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும், குஜராத்தி மொழியிலும் அவரால் சரளமாக நீண்ட நேரம் பேச முடியும்.

 வேத அறிவும், சித்தர்களுக்குரிய யோக அறிவும் நிரம்பப் பெற்றவர். கூர்மையான சிந்தனையாளர். உடனடியாக செயல்படக்கூடியவர். நேரடியாக மாநில முதல்வரான அவர் தொடர்ச்சியாக நான்கு முறை மக்களால் தனது சிறந்த நிர்வாகத் திறனுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் மீதுள்ள நம்பிக்கை, அவர் தேசபக்திமீது கொண்ட நம்பிக்கை இவற்றால் கவரப்பட்ட ஹிந்தி பேசும் மாநில மக்கள் இவர் ஹிந்திக் காரர் இல்லை என்று தெரிந்தும் கூட இவருக்கு அமோகமாக வாக்களிக்கிறார்கள் என்றால் இவர் திறமை எவ்வளவு பெரிதாக இருக்கும் என்பதை ஒருவர் நினைத்ததுப் பார்க்க வேண்டும்.

இப்படிப்பட்ட மகான் அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி ஒன்றில் “ 1987ம் ஆண்டு டிஜிட்டல் கேமராவை தான் பயன்படுத்தியதாகவும், அதன் மூலம் பாஜக மூத்ததலைவர் அத்வானியை புகைப்படம் எடுத்து அதனை இ-மெயிலில் பாஜக தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்திருந்தார் என செய்திகள் வந்தன.  

ஆனால் இந்தியாவில் இமெயில் அறிமுகமானது 1995ம் ஆண்டுதான் என்றும், 1987ம் ஆண்டுகளில் உலக அளவில் ஒரு சில செல்வந்தர்கள் மற்றும் அறிவியலாளர்கள் மட்டுமே இமெயில் பயன்படுத்தி வந்ததாகவும் எனவே மோடி பொய் பேசுவதாகவும் சில அதிருப்தி இணையதளவாசிகள் பதிவிட்டு பிரதமர் மோடிக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் நடுநிலை மற்றும் மோடியை ஆதரிக்கும் இணையதள வாசிகள் பலர் மோடி இ,மெயில் என்றுதான் குறிப்பிட்டுள்ளார். தனது இ,மெயில் என்று குறிப்பிடவில்லை. அந்த காலக் கட்டத்தில் முக்கிய புள்ளிகள் மெயில் பயன்படுத்திவந்தனர். அந்த முக்கிய பிரமுகர்களின் மெயில் – ஐ மோடி பயன்படுத்தியதைத்தான் அவர் கூறியுள்ளார். இதில் இடறுதல் எதுவும் இல்லை. அப்படியே இடறி இருந்தாலும் அவருக்கு இணையான வீர சிங்கம் வேறு எதுவும் இல்லை… எனவும் அவருடைய வெற்றியை பொறுக்கமுடியாத திறமையில்லாத பப்பு கோஷ்டிகள்தான் இவ்வாறு பொறாமையால் தவறான பதிவுகளை வெளியிடுகின்றன என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

Tags
Show More
Back to top button
Close
Close