செய்திகள்

நல்லக்கண்ணு வீட்டு விவகாரம் : முதலில் குரல் கொடுத்த நெடுமாறனுக்கு நன்றி கூற வேண்டாமா ?

தியாகராய நகரில்  வீட்டுவசதிவாரியத்தால் 1953 ஆம் ஆண்டு கட்டப்பட்ட 100 க்கும் மேற்பட்ட நடுத்தர வசதி குடியிருப்புகள் மிகவும் பழுதாகிவிட்டன. இந்த நிலையில் அங்கு பழைய வீடுகளை அப்புறப்படுத்திவிட்டு, புதிய வீடுகளை கட்டும் முயற்சியில் வீட்டுவசதி வாரியம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி அனைவருக்கும் இறுதி நோட்டீஸ் வழங்கப்பட்டதை அடுத்து பெரும்பாலோனோர் வீடுகளை காலி செய்தனர்.

கக்கன் குடும்பத்தினர் காலி செய்யாத நிலையில், கம்யூனிஸ்டு மூத்த தலைவர் வேறு வீடு பார்த்துக் கொண்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் முதலில் குரல் கொடுத்தவர் தமிழக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான நெடுமாறன்தான். அவர் வீட்டை காலி செய்யும் மூத்த தலைவர்களுக்கு அரசு வேறு இடம் ஒதுக்கித்தருமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை அளித்தார். இந்த செய்தி வெளியான பிறகுதான் மு.க.ஸ்டாலின் உட்பட பித்தலாட்டக்காரர்கள் இந்த விவகாரத்தை மிகவும் அரசியல் படுத்தி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

இந்த நிலையில் தமிழக அரசு நல்லக் கண்ணுவிற்கும், கக்கனுடைய நற்பெயருக்கும் மதிப்புதரும் வகையில் பொது ஒதுக்கீட்டில் வேறு வீடு ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளது.

அரசின் இந்த அறிவிப்பு தனக்கு பெரு மகிழ்ச்சி தருவதாகவும், அரசுக்கு நன்றி தெரிவித்தும் உள்ளார் நெடுமாறன். அரசுக்கு முதலில் நன்றி தெரிவித்தவரும் நெடுமாறன்தான். ஆனால் நெடுமாறனுக்கு நன்றி கூறும் பெரும்தன்மை மேற்கண்ட பித்தலாட்டக்காரர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. இவர்களின் நோக்கமே மாநிலத்தை கலவரப்படுத்துவதுதானே!! 

Tags
Show More
Back to top button
Close
Close