தமிழ் நாடு

கமலஹாசனை வெளுத்து வாங்கும் முன்னனி நடிகர்கள் – தலைமறைவானாரா கமல்?

அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பள்ளப்பட்டியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்று கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என தெரிவித்தார்.

கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கமல்ஹாசனின் அரவக்குறிச்சி பேச்சுக்கு பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள இந்தி நடிகர் விவேக் ஓபராய், “அன்புள்ள கமல் நீங்கள் ஒரு சிறந்த கலைஞன். கலைக்கு எப்படி மதம் கிடையாதோ அதேபோல் தீவிரவாதத்துக்கும் மதம் கிடையாது. கோட்சே தீவிரவாதி என நீங்கள் கூறி இருக்கலாம். ஏன் இந்து என குறிப்பிட்டு கூறினீர்கள். நீங்கள் வாக்கு கேட்கும் இடத்தில் இஸ்லாமிய வாக்காளர்கள் அதிகம் என்பதாலா? நாம் அனைவரும் ஒன்றே. தயவுசெய்து நாட்டை துண்டாக்காதீர்கள்” என தெரிவித்துள்ளார்.

இதே போல், கமலின் சர்ச்சை கருத்துக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ள நடிகை மாளவிகா அவினாஷ், “கோட்சே காந்தியை மதத்தின் பெயரால் கொண்றாரா இல்லை அரசியல் காரணங்களுக்காக கொன்றாரா? இந்திய சரித்திரம் பற்றி உங்களுக்கு பாடம் எடுக்க வேண்டும்” என வெளுத்து வாங்கியுள்ளார்.

ஹிந்துக்கள் தீவிரவாதிகளாக இருந்தால் கமலுக்கு இவ்வாறு பேச தைரியம் வந்திருக்குமா என கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை மாளவிகா.

இதே போல கமலின் சர்ச்சை கருத்துக்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ள கொயினா மித்ரா “கொலைகாரருக்கும், தீவிரவாதிக்கும் உள்ள வேறுபாட்டை முதலில் அறிக, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி பல லட்சம் ஹிந்துக்கள் இறப்பதற்கு காரணமான ஜின்னா தான்” என கர்ஜித்துள்ளார்.

https://twitter.com/koenamitra/status/1127826868332388352

அதே போல், தமிழ் திரைப்பட நடிகையும் நடன மாஸ்டருமான காயத்ரி ரகுராம் கமல் பேசியது தவறு என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடுமையான பதிவுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இவ்வாறு பல திரைப்பட நடிகர், நடிகைகள் கமலுக்கு கடுமையான எதிர்வினை ஆற்றி வரும் நிலையில் யாருக்குமே பதில் சொல்லாமல் இருப்பதும், தனது தேர்தல் பரப்புரைகளை ரத்து செய்து இருப்பதும் அவர் தற்சமயம் தலைமறைவாகியுள்ளாரா என்ற கேள்வியை எழுப்புகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close