அரசியல்செய்திகள்

சமூக வலைத்தளத்தில் கமலையும், வைகோவையும் வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!!

கமல் கோட்சே பற்றி பேசியதில் எந்த தவறும் இல்லை என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இதனால் வைகோவிற்கு சமூக வலைத்தளத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

மேலும் ஸ்டாலின் தங்கவிருந்த விடுதியில் சோதனை நடத்தியது தவறு என்ற அவர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் தங்கிருந்த விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார். மத்தியில் மாநில கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் தமிழகத்தையும் தமிழீழத்தையும் இணைத்து தனிநாடு கேட்கிறார்கள் என்ற கருத்தை முன்வைத்துத் தான் அவர்கள் மீது மத்திய அரசு தடைகொண்டு வந்ததாகத் தெரிவித்த வைகோ, ஆனால் அந்த வாதம் நீதிமன்றத்தில் எடுபடவில்லை என்ற நிலையில் விடுதலைப் புலிகள் மீதான தடை சட்டவிரோதம் என்று கூறினார்.

Tags
Show More
Back to top button
Close
Close