இந்தியா

இந்திய இறையாண்மையை காக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி – விடுதலைப் புலிகள் விவகாரத்தில் மத்திய அரசின் அதிரடி முடிவு..!

இந்தியாவில், விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பின், விடுதலை புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக் கப்பட்டது. இலங்கையில் புலிகள் இயக்கத்துக்கு எதிரான போரில் அந்நாட்டு ராணுவம் வெற்றி பெற்றதை அடுத்து, புலிகள் இயக்கத்தை முற்றி லுமாக அழித்துவிட்டதாக அந்த நாடு கூறிவருகிறது.

இருந்தாலும் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சிகளில் அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் வெளிநாடுகளில் ஒன்று கூடி செயல்பட்டுவருகின் றனர் என்றும் குறிப்பாக இந்தியாவில், தமிழகத்தில் அதற்கான ஆதரவு அதிகம் திரட்டப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம்அந்த அமைப்புக்கான தடையை மேலும் 5 ஆண்டுகள் அதாவது 2024-ம் ஆண்டு வரை நீட்டித்துள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் இந்தியாவில் இருப்பதாகவும் குறிப்பாகதமிழகத்தில் அதிகம் இருப்பதாகவும் அவர்கள் தடை செய்யப்பட்ட அந்த இயக்கத்துக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் விடுதலை புலிகளுக்கான ஆதரவைப் பெருக்க முயற்சிகள்

நடப்பதாகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் அவர்கள் செயல்படலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், எந்தெந்த அமைப்புகள் விடுதலை புலி களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன என்கிற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

Tags
Show More
Back to top button
Close
Close